Monday, 19 September 2011

Aasiriyar Dinam

இதுதான் எனது முதல் தமிழ் முயற்சி.  எது எனக்கே நான் எழுத்தில்  கொடுக்கும் ஒரு சவால்.  காலம்  சொல்லட்டும் எனது  முயற்சியின் வெற்றியை. எனது முதல் தலைப்பு ஆசிரயர் தினம். இதை பற்றி நான் முன்னதாகவே எனது இங்கிலீஷ் ப்ளோகில்  எழுதிவிட்டேன் . இருப்பினும், தமிழில் ஒரு பதிவு ஏற்படுத்த ஆசை.

உலகம் முழுவதும் ஆசிரியர் தினத்தை அக்டோபர் 5ம் தேதி கொண்டாடுகிறார்கள். இருப்பினும் பல நாடுகளில் இந்நாளை  சில குறுப்பிட்ட தேதிகளில் கொண்டாடுகின்றனர்.  எனது பள்ளிக்காலத்திலும் கல்லூரியிலும் மற்றும் எனது வாழ்க்கையிலும் எனக்கு கற்பித்து வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு  எனது வணக்கங்கள்.

நான் எவ்வளுவுதான் அவர்கள் மீது மதிப்பு வைத்திருந்தாலும்  ஓர்சில குறைகள் கண்ணில் படவே செய்கின்றன . 

நான் கடந்த சில  ஆண்டுகளாக ஒன்றை மட்டும் கவனித்து வருகிறேன்.  ஆசிரியர்கள் பாடம்  நடத்துவது மாணவர்களுக்காக அல்ல, தமக்காக. எத்தனை  முறை, "நீ முட்டாள், மண்டு-  தலையில் ஏறாது, ஒரு இடத்தில்  உட்கருகிரானா  பார், எத்தனை சொல்லியும் புரியல, கவனம் இல்ல, சொல்றதை கேட்காம காதிலே விழலே, தாட் பூட்... " 
ஒரு வாத்யராவது , என்ன தம்பி, உனக்கு கேட்டா    புரியலே, பார்த்தா புரியலே, செய்து பார்த்தா புரியுமான்னு  கேட்டதுண்டா ?  

சில மாணவர்க்கு கேட்டா போதும் ,  சிலருக்கு பார்த்தா தான் விளங்கும், எனக்கு செஞ்சு பார்த்தா தான் புரியும்.. இது ஏன் இந்த வாதியருக்கு புரியலே? 

மாணவர்க்கு  ஏத்தா மாதிரி பாடம் சொல்லி கொடுக்க வாத்தியாருக்கு   யார் சொல்லி கொடுப்பா?  நான் மக்கு-ன்னு வர எத வச்சு சொல்றார்? 

டாக்டர் சொல்லட்டும் என்னக்கு மூல வளர்ச்சி கம்மி ன்னு  கணக்கு  வாத்தியாரும் பிசிக்ஸ்  வாதியரும் டாக்டர்-ஆ? 

ஒரு மாணவனோட கற்றுக்கொள்ளும்  முறையும் அத்தகைய மாணவர்களை ஒன்று சேர்த்து கேட்டு கற்றல். காண்பித்து கட்ட்றல், செய் முறையால் கற்றல் என பிரித்து பாடம் நடத்தினால் என்ன?
எல்லோரும் ஒரு நிலைக்கு வருவார்கள். கொண்டு வரவேண்டும். அதுதான் ஆசிரியரின் பணி.

எல்லோரும் புத்திசாலிதான்.  மாணவனின் வளர்ச்சிதானே ஆசிரியரின் வெற்றிக்கு அறிகுறி?